
30 வகுப்புகள்
30+ வளவாளர்கள்
தொடர்ச்சியாக பதினாறு வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ள இவ் இணையச் சிறப்புத் திரைப்படப் பயிற்சிப் பட்டறையில், திரைப்படத் துறை சார்ந்த முப்பது விடையங்கள் அத் துறைசார் வல்லுனர்களால் இணைய வாயிலாக கற்பிக்கப்படும்.
இப் பயிற்சி பட்டறையானது, மே மாதம் பதினாறாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஒன்பதாம் திகதி வரை, பிரதி சனி மற்றும் ஞாயிறு தோறும் தாயக நேரம் மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் இணைய வாயிலாக நடைபெறும். மொத்தமாக முப்பது வகுப்புகள் நடைபெறும்.
விண்ணப்பித்தல் முடிவடைந்து விட்டது
குறித்த பயிற்சிகள் யாவும் இணையத்தின் வாயிலாக நடைபெறவுள்ளதால் இணைய வசதியுடனான கணினி அல்லது திறன்பேசி அவசியம் ஆகும்.
தாயகத்திலிருந்து இவ் சிறப்புத் திரைப்படப் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ள விரும்ப்புவோர், இணையச் செலவிற்கு சிரமப்படும் பட்சத்தில் எமக்கு முன்கூட்டியே மின்னஞ்சல் ஊடாக உங்கள் Sim number / Router number / Connection number ஆகிய விபரங்களைத் தந்தால் உங்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான உதவிகளைச் செய்வதற்கு முடிந்தவரை முயற்சிப்போம்.
பதின்மூன்று வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அவரவர்களின் ஆர்வம், படிப்பு அல்லது தொழில் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தெரிவு செய்யப்படும் அனைவருக்கும் உடனுக்குடன் கற்கைகளுக்கான முகவரி மற்றும் செயலி சார்ந்த விபரங்கள் மின்னஞ்சல் ஊடாக அறியத்தரப்படும்.
விண்ணப்ப உள்வாங்கல் அனைத்தும் மே பதினைந்தாம் திகதி வெள்ளிக் கிழமை நள்ளிரவுடன் (தாயக நேரம்) முடிவடையும். பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலாரிடம் அனுமதிக்கடிதம் பெற்று அதை எமக்கு மின்னஞ்ச்சல் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.
உங்கள் கணினி மற்றும் இணைய வசதிகளை சரிபார்த்துக்கொள்ளும் விதமாக மே பதினைந்தாம் திகதி (15. மே 2020) மாலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தருணத்தில் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கணினி அல்லது திறன்பேசி மற்றும் இணைய உறுதித்தன்மையை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
கற்கைகள் ஆரம்பிப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் வகுப்புகள் திறக்கப்படும், கற்கைகள் ஆரம்பித்து ஐந்து நிமிடங்களுக்குப் பின் எவ்வித வரவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தங்கள் வரவுகள் தானியங்கி வரவுப்பதிவேடு ஒன்றில் காலக்கிரமத்தின்படி சேகரிக்கப்படும். மட்டுப்படுத்தப்பட்ட மாணவரைக் கொண்ட வகுப்புக்கள் நடைபெறும் வேளைகளில் உங்கள் வரவு ஒழுங்கின் அடிப்படையிலேயே முன்னுரிமை அளிக்கப்படும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாதவர்கள், முற்கூட்டியே எமக்கு எழுத்துமூலம் அறியத்தருவது நல்லது.
மட்டுப்படுத்தப்பட்ட இடங்களே இருக்கும் நிலையில், முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை.
பொதுநல நோக்கோடு இப்பெருமுயற்சி எம்மால் முன்னெடுக்கப்படுவதால், விதி மீறுபவர்கள் அது தொடர்பான பதில்களோ விளக்கங்களோ இன்றி சிறப்புத் திரைப்படப் பயிற்சிப்பட்டறையில் இருந்து நீக்கப்படுவர் என்பதைத் தாழ்மையுடன் அறியத்தருகிறோம்.
மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் பயிற்சிப்பட்டறைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் மின்னஞ்ச்சல் முகவரி ஊடாக அறியத்தருவதுடன் எமது இணையத்தளத்திலும் (paddarai.org) வெளியிடப்படும்.
இதுமட்டுமன்றி https://t.me/paddarai எனும் Telegram கணக்கில் இணைவதன் மூலம் பட்டறை சார்ந்த தகவல்களை உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வண்ணம்,
‘பட்டறை’ நிர்வாகம்
04. மே 2020
பட்டறை பற்றிய எமது கலைஞர்களின் கருத்துக்கள்